/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ்சில் தவறவிட்ட போன்; பயணியிடம் ஒப்படைப்பு
/
பஸ்சில் தவறவிட்ட போன்; பயணியிடம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 09, 2025 07:12 AM
திருப்பூர்; ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் நேற்று வந்தது.
அவிநாசியை கடந்த போது, பஸ்சில் விலை உயர்ந்த மொபைல் போனை பயணி ஒருவர் தவற விட்டு சென்றதை நடத்துனர் ராமு கண்டெடுத்தார்.
இதுகுறித்து பஸ்சில் விசாரித்த போது, அவிநாசியில் இறங்கிய பயணி தவற விட்டு சென்றது தெரிந்தது. அந்த போனை நடத்துனர் ராமு, டிரைவர் வேல்முருகன் ஆகியோர் திருப்பூர் மண்டலத்தில் ஒப்படைத்தனர்.
சம்பந்தப்பட்ட பயணி பிரவீன்குமாருக்கு தெரியப்படுத்தி அவரை நேரில் வரவழைத்தனர். திருப்பூர் மண்டல பொது மேலாளர் சிவக்குமார் முன்னிலையில் ஒப்படைத்தனர். டிரைவர், நடத்துனரின் நேர்மையை பாராட்டிய பயணி, நன்றி தெரிவித்து சென்றார்.

