/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போட்டோ ஜியோ' ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
/
'போட்டோ ஜியோ' ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
'போட்டோ ஜியோ' ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
'போட்டோ ஜியோ' ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 04, 2025 03:16 AM

திருப்பூர்; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் 300 பேர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் லட்சுமிகாந்த் பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தவேண்டும். தமிழக அரசு, நிதி பற்றாக்குறை காரணமாக, கடந்த 2020ல் நிறுத்திவைத்த சரண் விடுப்பு ஒப்படைப்பு, 2026, ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்; நடப்பாண்டு ஏப்., 1ம் தேதி முதல் அமல்படுத்தவேண்டும்.
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கவேண்டும். மாநில முன்னுரிமை எனக்கூறி வெளியிட்டுள்ள அரசாணையை, மாவட்ட அளவில் முன்னுரிமை என திருத்தம் செய்யவேண்டும். தலைமைச்செயலகம் உள்பட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர், துாய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
இவ்வாறு லட்சுமிகாந்த் பேசினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் சுகன்யா, அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்று, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
----
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

