/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடல், மன ஆரோக்கியமே உயர்வுக்கான அச்சாரம்
/
உடல், மன ஆரோக்கியமே உயர்வுக்கான அச்சாரம்
ADDED : ஜன 01, 2025 05:27 AM
'கொரோனா' என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே, தவிர்க்க இயலாத நினைவலைகள் பலரது கண் முன் வரும் - நெருங்கிய உறவுகள், நண்பர்கள் என யாரையாவது கொரோனா பலிகொண்டிருக்கும்.
2021 இறுதிக்குப் பின் கொரோனா மெல்ல குறைய துவங்கியது. கடந்த, 2024 துவக்கத்தில் மாவட்டத்தில் திடீரென மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இருந்த போதும் தொடரவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டு 2025 கொரோனா இல்லாமல் பிறக்கிறது.
மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார் கூறுகையில், ''கடந்த டிச., முதல் வாரம் ஒருவருக்கு மட்டும் அறிகுறி உறுதியானது. தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவரும், நலம் பெற்று விட்டார். தற்போதைக்கு, மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை'' என்றார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்; இதை உணர்ந்து, உடல், மன ஆரோக்கியம் பேணுவதில் அக்கறை கொள்ள வேண்டும்.

