ADDED : மே 04, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: காங்கயம், மறவபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 50. இவரது மகன் ஜீவா, 25; படியூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
தந்தை அன்றாடம் மது அருந்தி விட்டு, வீட்டுக்கு வருவதால், மகன் மனமுடைந்து இருந்தார். இதுதொடர்பாக தந்தையிடம் தெரிவித்தும், அவர் பழக்கத்தை மாற்றி கொள்ளாமல் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் ஜீவா துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.