/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புனித பயணம் மேற்கொள்வோர் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
/
புனித பயணம் மேற்கொள்வோர் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
புனித பயணம் மேற்கொள்வோர் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
புனித பயணம் மேற்கொள்வோர் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 24, 2025 12:11 AM
திருப்பூர்; புனித பயணம் மேற்கொள்ளும் புத்தம், சமண, சீக்கியர்கள், தமிழக அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தை சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கியர்கள், இந்தியாவில் உள்ள அவரவர் மத தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக, அரசு சார்பில், ஆண்டுதோறும், ஒரு நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்குகிறது. 120 நபர்களுக்கு, மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்கள், விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில், இம்மாதம் 1ம் தேதிக்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு, மின்னணு தீர்வு முறையில் மானியம் நேரடியாக வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெறலாம்., www.bcmbcmw.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்தும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் நவ. 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பவேண்டும். 'மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அறை எண்: 116, முதல்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் - 641604 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.