/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு சீரானது போக்குவரத்து எளிதானது
/
குழாய் உடைப்பு சீரானது போக்குவரத்து எளிதானது
ADDED : டிச 21, 2024 11:34 PM

அவிநாசி: அவிநாசியில் இருந்து சேவூர் ரோடு திரும்பும் பகுதியில் சிக்னல் எதிரில் இரண்டாம் திட்ட குடிநீர் குழாய் உடைந்து பழுதானது. இதனால், கடந்த ஒரு மாதமாக, தண்ணீர் வெளியேறி அருகில் இருந்த சாக்கடையில் கலந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே அந்தப் பகுதியில் தண்ணீர் அதிக அளவு வெளியேறி குழி ஏற்பட்டது.
டிவைடர் வைத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக, போக்குவரத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். குழாய் உடைப்பு குறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதனால், கோவை ரோட்டில், சிக்னல் சந்திப்பில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.
நேற்று குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குழாய் பணிகள் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதால், போக்குவரத்து சீரானது. வியாபா ரிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.