/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிப்பு பணி போக்குவரத்து தடை * சீரமைப்புக்கு அச்சாரம்
/
குழாய் பதிப்பு பணி போக்குவரத்து தடை * சீரமைப்புக்கு அச்சாரம்
குழாய் பதிப்பு பணி போக்குவரத்து தடை * சீரமைப்புக்கு அச்சாரம்
குழாய் பதிப்பு பணி போக்குவரத்து தடை * சீரமைப்புக்கு அச்சாரம்
ADDED : ஜன 03, 2024 12:42 AM

திருப்பூர், ஜன. 3-ராம்நகர் பகுதியில் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பு பணி நடப்பதால், 2வது வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு, மேல்நிலைத் தொட்டிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதுதவிர, வீதிகள் தோறும் வினியோக குழாய்கள் மற்றும் குழாய் இணைப்பு பைப் பதிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், பல்வேறு பகுதிகளில் நீண்ட காலம் முன் அமைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்து, குடிநீர் கசிவும், சப்ளை குறைந்துள்ளது. அவ்வகையில் ராம்நகர், 2வது வீதியில் தற்போது குழி தோண்டி குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியால், வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
---
திருப்பூர், ராம் நகர், 2வது வீதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.