/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு
/
வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு
ADDED : மார் 13, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பிளஸ் 1 பாடத்தில், வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வை, 523 பேர் எழுதினர்.பிளஸ் 1 தேர்வில், நேற்று, வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு தேர்வு நடந்தது.
இதில், 536 மாணவர்கள் தேர்வெழுதும் தகுதி பெற்றிருந்தனர்; 21 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்; 515 பேர் தேர்வெழுதினர். தனித்தேர்வர்களாக, 9 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், ஒருவர் 'ஆப்சென்ட்' ஆக, 8 பேர் தேர்வெழுதினர்.
இத்தேர்வெழுதிய நஞ்சப்பா பள்ளி மாணவன் சசி கூறுகையில், ''தொழில் கல்வி பயில வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால், இப்பாடத்தை தேர்வு செய்து, படித்தேன். இந்த தேர்வு, எளிது என்றோ, கடினம் என்றோ சொல்வதிற்கில்லை,'' என்றார்.

