/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு சமையல் உதவியாளர் 262 பணியிடங்கள் நிரப்ப திட்டம்
/
சத்துணவு சமையல் உதவியாளர் 262 பணியிடங்கள் நிரப்ப திட்டம்
சத்துணவு சமையல் உதவியாளர் 262 பணியிடங்கள் நிரப்ப திட்டம்
சத்துணவு சமையல் உதவியாளர் 262 பணியிடங்கள் நிரப்ப திட்டம்
ADDED : ஏப் 10, 2025 11:56 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், 262 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. 21 முதல் 40 வயதுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் சமையல் உதவியாளருக்கு, ஓராண்டு பணிக்குப்பின்பு, சிறப்பு காலமுறை ஊதியம், மூவாயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 முதல் 40 வயதுக்குள்; பழங்குடியினர் 18 முதல் 40 வயது வரை; விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், 20 முதல் 40 வயது வரையிலானோர் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தமிழ் சரளமாக பேசத்தெரிந்தவராக இருக்க வேண்டும்.
நியமனம் கோரும் மையத்துக்கும், குடியிருப்புக்கும் இடையே 3 கி.மீ., துாரத்துக்குள் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம்; விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பள்ளி மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, ஆதார், சாதி சான்று, விதவை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றுகளுடன், வரும் 29ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

