/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் சாகுபடிபரப்பு அதிகரிக்க திட்டம்; மானிய விலையில் விதை வினியோகம்
/
மக்காச்சோளம் சாகுபடிபரப்பு அதிகரிக்க திட்டம்; மானிய விலையில் விதை வினியோகம்
மக்காச்சோளம் சாகுபடிபரப்பு அதிகரிக்க திட்டம்; மானிய விலையில் விதை வினியோகம்
மக்காச்சோளம் சாகுபடிபரப்பு அதிகரிக்க திட்டம்; மானிய விலையில் விதை வினியோகம்
ADDED : அக் 03, 2025 09:56 PM
திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்யும் நோக்கில், மானிய விலையில் மக்காச்சோள விதை வழங்கப்படுகிறது'' என, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், பிரதான பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோள பயிரின் முக்கியத்துவத்தை, விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்து, சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில், அரசின் சார்பில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மானிய விலையில் மக்காச்சோள விதைகள் விற்கப்படுகின்றன.
தற்போது, திருப்பூர் மாவட்டத்தில், பருவமழை துவங்கியுள்ள நிலையில், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளிலும், மக்காச்சோள விதைகள் இருப்பு போதியளவில் உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மக்காச்சோள சிறப்பு தொகுப்பு, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (தானியங்கள்) திட்டங்களில், மக்காச்சோள தொகுப்பில் விதை, உயிர் உரங்கள், நானோ யூரியா மற்றும் இயற்கை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதைகளை பெற, வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.