sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜி.எஸ்.டி., குறைக்க திட்டம்: தொழில்துறை வரவேற்பு

/

ஜி.எஸ்.டி., குறைக்க திட்டம்: தொழில்துறை வரவேற்பு

ஜி.எஸ்.டி., குறைக்க திட்டம்: தொழில்துறை வரவேற்பு

ஜி.எஸ்.டி., குறைக்க திட்டம்: தொழில்துறை வரவேற்பு


ADDED : ஆக 16, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'நம்பிக்கையுடன் வரி செலுத்தியவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில், ஜி.எஸ்.டி., சீரமைக் கப்படுகிறது,' என்ற பிரதமரின் அறிவிப்பை, பின்னலாடை தொழில்துறையினர் மற்றும் ஆடிட்டர்கள் வரவேற்றுள்ளனர்.

'அரசின் ஜி.எஸ்.டி., புது திட்டத்துக்கு மக்களிடம் முழு ஆதரவு கிடைத்துள்ளது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி., வருவாய் அதிகரித்துள்ளது. அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாக, நன்றி பாராட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் அக்., மாதத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பான அறிவிப்பு வெளியாகும்,' என்று சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி., அறிமுகமாகி, இதுநாள் வரை, பல்வேறு திருத்தங்களுடன், சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் வரி வருவாய் மாதாமாதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு பிரிவாக இருக்கும் வரிவிதிப்பு, 5 மற்றும் 18 என, இரண்டாக குறையுமெனத் தெரிகிறது.

அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக, மக்கள் முறையாக வரி செலுத்தி வருகின்றனர்; அவர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், நன்றி பாராட்டும் வகையில், வரி சீரமைப்பு நடைபெற இருப்பதாக, ஆடிட்டர்கள் மற்றும் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், மூலப்பொருள் கொள்முதல் வரி அதிகமாகவும், விற்பனை வரி குறைவாகவும் இருப்பதால், கூடுதலாக செலுத்தி வரி கணக்கை பராமரித்து, உள்ளீட்டு வரியாக திரும்ப பெறுகின்றனர். ஒரே அளவிலான வரி விதிக்கப்பட்டால், உள்ளீட்டு வரி தொடர்பான சிரமங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆடிட்டர்கள் நம்முடன் பகிர்ந்தவை ராமநாதன், ஆடிட்டர், திருப்பூர்: வரியை குறைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில்லை; நெறிப்படுத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு, ஒட்டுமொத்தமாக, 5 சதவீதம் வரிவிதிக்கலாம். குறிப்பாக அனைத்து வகை உணவு பொருட்களுக்கும், 5 சதவீத வரி விதிக்கலாம்.

அனைத்து வகையான சேவை பணிகளுக்கும், 18 சதவீதம் வரிவிதிக்கின்றனர்; சேவை என்பதால், 5 சதவீதமாக மாற்றியமைக்கலாம். அரசு தரப்பு, வரிவிதிக்கும் போதோ, நெறிப்படுத்தும் போதோ, குறுகிய காலத்துக்கு, சிறு பாதிப்பு இருக்கும்; விரைவில், முழுமையான இயக்கத்துக்கு வந்துவிடும். அதிகபட்சமாக, மூன்று மாதத்துக்குள் இயல்பு நிலை திரும்பும் என்பதே, வரி நிபுணர்களின் கருத்து. நம்பிக்கையாக வரி செலுத்தி வரும் மக்களுக்கு நன்றி பாராட்டும் வகையில், வரி நெறிப்படுத்தப்படுகிறது.

வரியை நெறிப்படுத்தினால், அரசு வருவாய் சில மாதம் குறைந்தாலும், வர்த்தகம், வியாபாரம் பெருகி, ஈடுகட்டிவரும்.

நடைமுறை மூலதன செலவு குறையும் செந்தில்குமார், முன்னாள் தலைவர், திருப்பூர் கிளை, இந்திய பட்டய கணக்காளர் சங்கம்: ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம் தொடர்பாக, தீபாவளி பரிசு காத்திருப்பதாக, பிரதமர் அறிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சகமும், மூன்று முக்கிய அம்சங்களை முன்மொழிந்துள்ளது. வரி வடிவமைப்பு, விகிதாசாரம், நடைமுறை எளிதாக்கம் ஆகிய சீர்திருத்தம் நடைபெற உள்ளது. உள்ளீட்டு வரி மற்றும் வெளியீட்டு வரிக்கு இடையில் உள்ள முரண்பாட்டால், 'இன்வெர்டட் டியூட்டி' எனப்படும் முறையில், உள்ளீட்டு வரி தேக்கமடைவதை சரிசெய்ய வேண்டும்.

மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விருப்ப பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சேவை மற்றும் விற்பனையில், பலவரி விதிப்பு இருக்கிறது; இவற்றை, இரு வரியாக குறைக்க வேண்டும். உள்ளீட்டு வரி, விரைவாகவும், தானியங்கி முறையிலும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் புதிய திருத்தத்தை அமல்படுத்தும் போது, பின்னலாடை தொழில் பிரிவுகள் பயன்பெறும்; உள்ளீட்டு வரியை விரைவாக சமன்செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆயத்த ஆடை என்பதும் அத்தியாவசியமாக இருப்பதால், 5 மற்றும் 12 சதவீதம் என்பதை, 5 சதவீத வரியாக நிர்ணயித்தால், ஆடை விலையும் குறையும். பிரின்டிங், சாயமிடுவது போன்ற பிராசசிங் பிரிவுகளுக்கு, 12 சதவீத வரியை, 5 சதவீதமாக குறைக்கலாம். தற்போதைய சூழலில், ஒவ்வொரு தொழில் அமைப்புகளும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு செல்லலாம். இதன்மூலம், நடைமுறை மூலதன செலவு குறைந்து, பணப்புழக்கம் சீராகும்; போட்டித்திறன் உயரும். குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில்கள் நன்மை பெறும்.

பொருட்கள் விலை குறைய வாய்ப்பு முத்துராமன், வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு, திருப்பூர்: பிரதமர் அறிவித்துள்ள வரி சீர்திருத்தம் வரவேற்புக்குரியது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 சதவீதமாக இருப்பதை, 5 மற்றும் 18 என, இரண்டு அடுக்காக மாற்ற உள்ளனர். இது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் விரைவில் முடிவு செய்யும். இரண்டு அடுக்காக மாறினால், 28 சதவீதம் என்பது இருக்காது; அதிக வரி செலுத்தி, 'எலக்ட்ரானிக் கிரெடிட் லெட்ஜர்'ல், தொழில்துறையினர் நிலுவை வைக்கும் சிக்கல் இனி இருக்காது.

நிதி ஓரிடத்தில் தேங்காது; பொருளாதார சிக்கல் இல்லாமல், வணிகம் செய்யலாம். 'ஒரே நாடு ஒரே வரி' என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். விவசாய பொருட்கள் நீங்கலாக, அனைத்து பொருட்களுக்கும், ஒரே மாதிரியான வரி விதிப்பு செய்யலாம். உணவு பொருட்களுக்கு 5 சதவீதமாக வரியை குறைக்கலாம். நுகர்வோர்தான், வரி விதிப்பால் பாதிக்கப்படுகின்றனர். வரி சீரமைப்பால் பொருட்கள் விலை குறையவும் வாய்ப்புள்ளது.

தொழில்துறையினர், அதிக வரி செலுத்தி, உள்ளீட்டு வரிபெற முடியாமல், இருப்பில் வைக்கும் சிக்கல் இருக்காது. மத்திய அரசின் வரிசீர்திருத்த முடிவு வரவேற்புக்குரியது; ஒட்டுமொத்த திருப்பூரும் பயன்பெறும். வர்த்தகர்களுக்கு நிதிச்சுமை குறையும்; நுகர்வோருக்கு, பொருட்கள் விலை குறையும்.






      Dinamalar
      Follow us