/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
730 தேக்கு மரக்கன்று நடவு; வலிமை காட்டும் பசுமை
/
730 தேக்கு மரக்கன்று நடவு; வலிமை காட்டும் பசுமை
ADDED : டிச 03, 2024 11:49 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூலனுார் அடுத்துள்ள காத்தசாமி பாளையத்தில், 830 மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மொத்த இலக்கான, மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை, வரும் வாரத்தில் எட்டப்பட உள்ளது.
கிராமப்புற விவசாயிகள், நீண்ட வருவாய் அளிக்கும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புகின்றனர்.
மூலனுார் அருகே, காத்தசாமிபாளையம் ஊத்துக்காட்டு தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. கோகுல், புகழ், வடிவு ஆகியோரின் தோட்டத்தில், தேக்கு - 730, செம்மரம் - 70, சந்தனம் - 10, வேங்கை - 10, வாகை - 2, ஈட்டி - 2, கடம்பு - 2, கருங்காலி - 2, கடம்பு - 2 என, 830 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.