/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு
/
பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு
ADDED : ஆக 17, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; கிராமிய மக்கள் இயக்கம்; விதை பசுமை இயக்கம்; பெருமாநல்லுார் மற்றும் செங்கப்பள்ளி ரோட்டரி சங்கங்கள் சார்பில், பனை விதை நடும் நிகழ்வு செங்கப்பள்ளி ஊராட்சி, பள்ளபாளையம் குளத்தில் நடந்தது.
மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன், தொடங்கி வைத்தார். துவக்க நாளில் 750 பனை விதைகள் நடப்பட்டன. இருபதாயிரம் பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளனர். நடும் பனை விதைக்கு மழைக்காலம் வரை தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.