/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராசாபாளையத்தில் 250 மரக்கன்று நடவு
/
ராசாபாளையத்தில் 250 மரக்கன்று நடவு
ADDED : அக் 14, 2025 01:01 AM

திருப்பூர்;'வெற்றி' அறக்கட்டளையின், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மாவட்டம் முழுவதும் மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. பசுமை பரப்பை விரிவாக்கும் நோக்கில், வனத்துறையுடன் இணைந்து, பல்வேறு இளம் பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் நேற்று, காங்கயம், ராசாபாளையத்தில், மூர்த்தி - சுலோச்சனா ஆகியோருக்கு சொந்தமான குட்டைதோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பூந்தி கொட்டை -50, இலுப்பை - 70, புங்கன் - 50, தேக்கு - 40, சொர்க்கம் - 30, புளியன் - 10 என, 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விருப்பமுள்ளவர்கள், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என,தெரிவித்துள்ளனர்.