/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டென்னிகாய்ட் - சிலம்பம்: மாணவர்கள் உற்சாகம்
/
டென்னிகாய்ட் - சிலம்பம்: மாணவர்கள் உற்சாகம்
ADDED : அக் 14, 2025 01:00 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டி, பள்ளி கல்வித்துறை சார்பில், காங்கயம் ரோடு, வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி செயலாளர் நகுலன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற, 64 பேர் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
ஒற்றையர் 14 வயதினர் பிரிவில், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி அணி, இரட்டையர் பிரிவில் அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி அணி; ஒற்றையர் 17 வயதினர் பிரிவில், வித்யவிகாஷினி பள்ளி, இரட்டையர் பிரிவில், காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, ஒற்றையர் 19 வயதினர் பிரிவில், வித்யவிகாஷினி பள்ளி, இரட்டையர் பிரிவில் அய்யங்காளிபாளையம் பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றன.
சிலம்பம் போட்டி 264 பேர் பங்கேற்பு திருப்பூர், குமார்நகர், பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சிலம்பம் போட்டி நடந்தது. விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆனந்தன் போட்டிகளை நடத்தினர்.
மாணவர், மாணவியர் பிரிவில், மொத்தம், 264 பேர் பங்கேற்றனர். 14, 17 மற்றும், 19 வயது பிரிவினருக்கு, 30 கிலோ முதல் 80 கிலோ வரையிலான எடைபிரிவுக்கு ஏற்ப, ஒற்றைக்கம்பு, இரட்டைகம்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிலம்பம் போட்டிகள் நடந்தது. முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர்.