/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு
/
மடத்துக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு
ADDED : நவ 27, 2024 09:34 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் பகுதிகளில் சவுக்கு மற்றும் மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
வனத்துக்குள் திருப்பூர் - 10 திட்டத்தில், 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் பசுமை பயணம் வேகமாக சென்று கொண்டுள்ளது.
உடுமலை பகுதிகளில், இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி, இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு இரு முறை நீர்த்தேவை மற்றும் மண் வளம் உள்ள பகுதிகளில், நான்கு ஆண்டுகளில், பயன் தரும், சவுக்கு மரக்கன்றுகள் நட விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர், அதன் அடிப்படையில், மடத்துக்குளம், கணியூர் பகுதியில், டாக்டர் முகமதுக்கு சொந்தமான நிலத்தில், 5 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதே போல், மடத்துக்குளம், மைவாடி விவசாயி, கார்த்திக்கு, சொந்தமான விவசாய நிலத்தில், மகாகனி மரக்கன்றுகள், 350 நடவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படும் நிலையில், மரக்கன்றுகள் நடவு செய்து, வளர்க்க விரும்பம் உள்ள விவசாயிகள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.