/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைநீர் சேகரிப்பு கிணற்றில் பிளாஸ்டிக் பாட்டில் மயம்
/
மழைநீர் சேகரிப்பு கிணற்றில் பிளாஸ்டிக் பாட்டில் மயம்
மழைநீர் சேகரிப்பு கிணற்றில் பிளாஸ்டிக் பாட்டில் மயம்
மழைநீர் சேகரிப்பு கிணற்றில் பிளாஸ்டிக் பாட்டில் மயம்
ADDED : நவ 04, 2025 12:00 AM

பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு கிணறு, பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளால் நிரம்பி வருகிறது.
ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கடந்த காலங்களில், கிணறுகள் தான் நீர் ஆதாரமாக இருந்து வந்தன. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, தண்ணீர் தேவைகள் அதிகரித்ததால், ஆழ்துளை கிணறுகள் பெருகிவிட்டன. நீர் ஆதாரமாக விளங்கி வந்த பெரும்பாலான கிணறுகள் பயன்பாடின்றி கைவிடப்பட்டன. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு கிணறு, பயன்பாடின்றி கிடக்கிறது. இதில், மழைநீருடன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப்பைகள், குப்பைகள், தின்பண்ட பாக்கெட்கள் உள்ளிட்ட பலவும் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள், கழிவுகள் சிறிது சிறிதாக கிணற்றை ஆக்கிரமித்து வருகின்றன.
கிணற்றைப் பராமரித்து பாதுகாத்தால், அரசு மருத்துவ மனையின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

