/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாவட்ட டென்னிஸ் சாம்பியன்
/
பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாவட்ட டென்னிஸ் சாம்பியன்
ADDED : அக் 13, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில், மாவட்ட டென்னிஸ் போட்டி நடந்தது. இதில், திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாணவ, மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். 14 வயது தனிநபர் பிரிவில் பிரனேஷ், இரட்டையர் பிரிவில் பிரனேஷ், பிரணவ் முதலிடம். மாணவியர் தனிநபர் பிரிவில் பிரீத்விகா, இரட்டையரில் பிரித்விகா மோகிதாஸ்ரீ முதலிடம்.
பதினேழு வயது மாணவர் தனிநபர் அஷ்வின்குமார், இரட்டையரில் அஷ்வின்குமார், ரித்திஷ் முதலிடம். மாணவியர் பிரிவில், தனிநபர் ஆரஜெசி, இரட்டையரில் ஸ்ரீநிதி, ஆரஜெசி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.