ADDED : அக் 30, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், வேலுாரில் நடந்தது.
இதில் பங்கேற்ற திருப்பூர், பிளாட்டோஸ் பள்ளி மாணவன் பிரனேஷ், 17 வயதினர் பிரிவில் வெற்றி பெற்றார். இதன் மூலம், உ.பி., மாநிலம், லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவனையும், பயிற்சியாளர்கள் சந்தோஷ், சுரேஷ், சரண்யா ஆகியோரையும் பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், முதல்வர் ஸ்ரீகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

