/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு மைதானம் திறப்பு 225 மரக்கன்றுகள் நடவு
/
விளையாட்டு மைதானம் திறப்பு 225 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஆக 28, 2025 11:38 PM

திருப்பூர், ; திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் புதிதாக அமைக்கப்பட்ட மைதான வளாகத்தில், 225 மரக்கன்று நடப்பட்டது.திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில், ஹாக்கி மற்றும் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட்ஸ் குழும சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். அதன்பின் மைதான வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினர் வழங்கிய, 225 மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லுாரி என்.எஸ்.,எஸ்., அலகு 2 மாணவர்கள், மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், திருப்பூர் நிட்- சிட்டி ஹாக்கி கிளப் தலைவர் மோகன்குமார், சிக்கண்ணா நடைபயிற்சி சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த், செயலாளர் மணிகண்டன், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

