/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐப்பசி பட்டம் நெருங்குதே உழவு - நடவு பணி துவக்கம்
/
ஐப்பசி பட்டம் நெருங்குதே உழவு - நடவு பணி துவக்கம்
ADDED : அக் 01, 2024 12:08 AM

பல்லடம் ; ஐப்பசி பட்டத்துக்கு தயாராகும் பல்லடம் வட்டார விவசாயிகள், உழவு, நடவு பணியை துவக்கி உள்ளனர்.
பல்லடம் வட்டாரத்தில், தென்னை, வாழை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்கள் உட்பட, தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை, பாவல் என, காய்கறி பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி., நீர் பாசன விவசாயிகளுக்கு ஆதாரமாக உள்ளது. பருவ மழையை ஆதாரமாகக் கொண்டு
எண்ணற்ற விவசாயிகள் மானாவாரி சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொள்ளாமல் காத்திருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், ஐப்பசி பட்டத்துக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக, உழவு நடவு என, விளை நிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.