/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 18, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா, தாராபுரம் பொன்னு மெட்ரிக் ஆகிய இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது.
இரு மையங்களில், 510 ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. திருத்தப்பட்ட விடைத்தாள்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த தேர்வு மையத்தில் இருந்து, கணினி வழியாக தேர்வுத்துறை இணையத்தில், பதிவேற்றம் செய்யும் பணி துவங்கும்.
பாட வாரியாக மதிப்பெண் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் நடைபெறும். மே, 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

