sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயார்

/

பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயார்

பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயார்

பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயார்


ADDED : பிப் 28, 2024 11:46 PM

Google News

ADDED : பிப் 28, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நாளை (மார்ச் 1ம் தேதி) பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்குகிறது. இன்று பள்ளி, வகுப்பறை தேர்வுத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது.

மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. முதன்மை கண்காணிப்பாளர், வழித்தட அலுவலர், பறக்கும் படை குழுவினர் உள்ளிட்டோருக்கு கடந்த வாரம் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், தேர்வரை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பபட்டனர்.

யார், யார் எந்தெந்த தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும்; எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும்; தேர்வு துவங்கும் முன், தேர்வு முடிந்த பின் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையமாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளின் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பள்ளிக்கு செல்ல வேண்டும்.

இன்று, பள்ளி மற்றும் வகுப்பறை தேர்வு மையம், தேர்வறையாக மாற்றப்பட்டு, தேர்வுத்துறை அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்படும். இன்று தேர்வறைகளில் தேர்வர்களின் பதிவு எண் ஒட்டப்படும், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, தேவையான முன்னேற்பாட்டு பணி மேற்கொள்ளப்படும்.

பள்ளி நேரம் மாற்றம்

பொதுத்தேர்வு நடக்கும் நாட்களில், தேர்வறை மையமாக மாறியுள்ள மேல்நிலைப்பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பள்ளி நேரம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம், 2:00 மணி முதல், மாலை, 4:30 அல்லது, 4:45 மணி வரை பள்ளிகள் செயல்படும். தேர்வு நடக்காத நாட்களில் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்பட்டு, நாள் முழுதும் பள்ளி செயல்படுமென மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us