தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு 


ADDED : மார் 25, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் ; கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 94 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3 ம் தேதி துவங்கியது. 11 ஆயிரத்து, 874 மாணவர்கள், 13 ஆயிரத்து, 989 மாணவியர் என, 25 ஆயிரத்து, 863 பேர் தேர்வெழுதி வருகின்றனர்.

கடந்த, 6 ம் தேதியுடன் மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, 11 முதல் முக்கிய பாடத்தேர்வுகள் துவங்கின. கடந்த, 21 ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தது. இன்று இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள் ஆகிய தேர்வுகள் நடக்கிறது. இன்றைய தேர்வுகளுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல், 4ம் தேதி துவங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us