ADDED : அக் 26, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், பி.என். ரோட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் கூத்தம்பாளையம் வரை, மாநகராட்சி சார்பில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பான்மையானவை எரிவதில்லை. பிரதானமான, குடியிருப்புகள், போக்கு வரத்து நிறைந்த இந்த சாலை, இரவில் இருளில் மூழ்குகிறது.
ரோட்டில் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டுள்ளன; மழை நீரால் ஆங்காங்கே குழிகள் உள்ளன. வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்கின்றனர். திருட்டு, வழிப்பறி அபாயமும் உள்ளது. 'மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை' என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

