ADDED : அக் 26, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டடம் அருகே, தாராபுரம் - ஈரோடு பிரதான ரோட்டில், நொச்சி பாளையம் பகுதியில் மூட்டை, மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.
கேரளாவில் இருந்து உணவு பொருள் மசாலா பொருள் உற்பத்தி நிறுவனம் வெளியேற்றிய கழிவுகள் எனத் தெரிந்தது. விசாரணை நடத்திய அலுவலர்கள், இவற்றை கொண்டுவந்து கொட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வாகனத்தை கண்டறிந்து வரவழைத்தனர்.
அதே வாகனத்தில் கழிவு மூட்டைகள் ஏற்றப்பட்டன. அவை கேரளாவில் இருந்து அனுப்பி வைத்த நிறுவனத்திலேயே மீண்டும் கொண்டு சென்று கொட்டப்பட்டது. இதுகுறித்த ஆதாரங்களை கழிவு களைக் கொண்டு வந்த ஒப்பந்ததாரர் தரப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

