/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்க்குட்டிக்கு 'நியுமோதெராக்ஸ்' சிகிச்சை; நோய் பாதிப்பிலிருந்து மீட்பு
/
நாய்க்குட்டிக்கு 'நியுமோதெராக்ஸ்' சிகிச்சை; நோய் பாதிப்பிலிருந்து மீட்பு
நாய்க்குட்டிக்கு 'நியுமோதெராக்ஸ்' சிகிச்சை; நோய் பாதிப்பிலிருந்து மீட்பு
நாய்க்குட்டிக்கு 'நியுமோதெராக்ஸ்' சிகிச்சை; நோய் பாதிப்பிலிருந்து மீட்பு
ADDED : ஜூலை 29, 2025 08:05 PM

உடுமலை; 'நியுமோதெராக்ஸ்' நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்குட்டிக்கு, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து பாதிப்பிலிருந்து மீட்டனர்.
உடுமலை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை சிகிச்சை வளாகம் பெதப்பம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, கால்நடைகளுக்கான பல்வேறு நவீன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது; செல்லப் பிராணிகளுக்கு தேவையான சிகிச்சைகளுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பிராணிகள் அழைத்து வரப்படுகின்றன.
அவ்வகையில், இரண்டு வயதுடைய ராஜபாளையம் நாய்க்குட்டி, மூச்சுத்திணறல், பசியின்மை மற்றும் நடப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் அழைத்து வரப்பட்டது.
கால்நடை மருத்துவவியல் துறை பேராசிரியர் இன்பராஜ் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சையளித்தனர். எக்ஸ்ரே வாயிலாக, நாய்க்குட்டிக்கு 'நியூமோதெராக்ஸ்' நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டது.
பின்னர், மார்பு பகுதியில் ஏற்பட்ட காற்று அகற்றப்பட்டது; தொடர்ச்சியாக இப்பிரச்னை ஏற்பட்டதால், 'ஆட்டோ லோகஸ் பிளட் பேட்ச் ப்ளுரோடெசிஸ்', எனப்படும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நாய்க்குட்டி நலமடைந்தது.
'' உடுமலை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை சிகிச்சை வளாகத்தில், கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. தேவையான மருத்துவ வசதிகள் உள்ளதால், சிகிச்சை வளாகத்துக்கு செல்லப்பிராணிகள், கால்நடைகள் அதிகளவு அழைத்து வரப்படுகிறது. கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும், கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்படுகிறது,'' என கால்நடை மருத்துவவியல் துறை பேராசிரியர் இன்பராஜ் தெரிவித்தார்.