/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் 'போக்சோ' விழிப்புணர்வு; மாணவர்களுடன் கலந்துரையாடல்
/
பள்ளியில் 'போக்சோ' விழிப்புணர்வு; மாணவர்களுடன் கலந்துரையாடல்
பள்ளியில் 'போக்சோ' விழிப்புணர்வு; மாணவர்களுடன் கலந்துரையாடல்
பள்ளியில் 'போக்சோ' விழிப்புணர்வு; மாணவர்களுடன் கலந்துரையாடல்
ADDED : டிச 03, 2024 06:21 AM

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், போக்சோ சட்டம் மற்றும் போதைபொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் உடுமலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அமுதவள்ளி பேசினார்.
மேலும், மாணவர்கள் தற்சார்பு ஒழுக்கமுடனும், தங்களுக்கான பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு, 1098 எண்ணை பயன்படுத்த வேண்டும்.
பாலியல் சார்ந்த கொடுமைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இந்த எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சப்- இன்ஸ்பெக்டர் ருக்மணிதேவி, போதைபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து இச்சட்டம் குறித்து, போலீசார் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.