/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசாரும் - வேகத்தடையும்.. அம்மாபாளையத்தில் வேண்டும் பெற்றோர் - மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 02, 2024 06:46 AM

அவிநாசி : அம்மாபாளையம் பகுதியில் பள்ளிகள் முன் வேகத்தடை அமைத்தும், போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் செயல்படுகிறது. அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலை ஒட்டியே செயல்படும் இரு பள்ளியிலும், 2 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளிகள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. ஆனால், சிக்னலை மதிக்காமல் வாகனங்கள் இயக்கப்படுவதால், பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும்நேரத்திலும், பள்ளி முடிந்து வரும் நேரத்திலும் மாணவர்கள் அதிகளவில் வெளியேறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் வாகனங்கள் இயக்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது.
இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் யாரும் பணியில் இருப்பதில்லை. இதனால், மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இரு பள்ளிகள் முன் வேகத்தடை அமைக்கவும், போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.
---
அம்மாபாளையத்தில், ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் பள்ளி மாணவர்கள்.