/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகன சோதனையில் போலீசார் தீவிரம்
/
வாகன சோதனையில் போலீசார் தீவிரம்
ADDED : ஜன 19, 2025 12:29 AM

திருப்பூர்: சென்னையில் நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் காரணமாக திருப்பூரில் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
சென்னை சுற்றுப்பகுதியில் நேற்று ஒரே நாளில், 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்துப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று முதல் பெரும்பாலானோர் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பத் துவங்கினர்.
வெளி மாவட்டங்களில் வேலை, கல்வி, தொழில் காரணங்களுக்காக சொந்த ஊர் மற்றும் குடும்பத்தினரை விட்டு வசித்து வந்தவர்கள், பண்டிகையையொட்டி கிடைத்த ஒரு வார விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டு தற்போது திரும்பத் துவங்கியுள்ளனர். பஸ், ரயில், வாடகை கார்கள், சொந்த வாகனங்கள் என வழக்கத்தை விட அனைத்து போக்குவரத்துக்களும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இது போன்ற நெரிசல் மற்றும் நெருக்கடி மிகுந்த நேரங்களில் வாகனப் போக்குவரத்து குறித்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வகையில் நேற்று திருப்பூர் மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர். மேலும் வாகன சோதனைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

