ADDED : ஆக 24, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் தெற்கு தாலுகா, பெருந்தொழுவு ரோடு, அருள் ஜோதி நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 மூட்டை ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் நடத்திய திடீர் சோதனையில், 950 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
