/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை அழித்த போலீசார்
/
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை அழித்த போலீசார்
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை அழித்த போலீசார்
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை அழித்த போலீசார்
ADDED : ஜூலை 10, 2025 11:26 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 337 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
கடந்த, 2019ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட, 135 கஞ்சா வழக்குகளில், குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை, சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதல் படி, கோவை தனி சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவில், திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 337 கிலோ கஞ்சா, கோவை, மதுக்கரை தாலுகா, செட்டிபாளையத்தில் இயங்கி வரும் பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில், எரியூட்டி அழிக்கப்பட்டது.
திருப்பூர் கஞ்சா ஒழிப்புக்குழு தலைவரும், கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில், திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் செந்தில்ராஜா, லோகநாதன், துணை ஆணையர் ராஜராஜன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் முன்னிலையில், கஞ்சா அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.