3 கிலோ கஞ்சா பறிமுதல்
படியூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. பத்து கிராம் எடையுள்ள, 150 கஞ்சா பொட்டலம் என, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பீஹாரை சேர்ந்த தீரஜ்குமார், 20, தர்மேந்திர குமார் மேத்தா, 23 என, இருவரையும் காங்கயம் போலீசார் கைது செய்தனர்.
l மங்கலத்தில் போலீசார் நடத்திய சோதனையில், புக்குளிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, பிரகாஷ் மஜ்ஹி, 25, உமாகந்தா பாரிக், 26, தொக்கிராம் பாரிக், 29 ஆகிய மூன்று பேரிடம் இருந்து, ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
டூவீலர் திருட்டு; இருவர் கைது
காங்கயம், சிவன்மலை அருகே சரவணா நகரை சேர்ந்தவர் சேதுபதி, 24; பனியன் தொழிலாளி. கடந்த ஆக., மாதம் பழைய டூவீலரை வாங்கினார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார்.
மறுநாள் பார்த்த போது, டூவீலர் மாயமானது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரித்து சூர்யபிரகாஷ், 21, கோகுல்பிரசாத், 18 என, இருவரை கைது செய்தனர்.

