நகை பறித்த இருவர் கைது
கருவம்பாளையம், வெடத்தலாங்காட்டை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 60. இவரிடம் மூன்று பேர், ஐந்து சவரன் நகையை பறித்து சென்றனர். சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்து, திண்டுக்கல்லை சேர்ந்த அசாரூதீன், 27 மற்றும் தனுஷ்லால், 24 என, இருவரை கைது செய்து, 4.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
சிறுமி உடல் மீட்பு
விஜயாபுரம், வி.ஐ.பி., கார்டனை சேர்ந்தவர் சாதனா, 14; அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அருகே இருந்த கிணற்றில் குதித்தார். தீயணைப்பு வீரர்கள் நேற்று இவரது உடலை மீட்டனர். இவரது தந்தை மதுபோதையில் தனது தாத்தாவை தாக்கியதால் மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் மர்ம மரணம்
காங்கயம் - திருப்பூர் ரோடு நீலக்காட்டுப்புதுாரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், 60 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. முகத்தில் காயங்கள் இருந்தன. கொலையா, தற்கொலையா அல்லது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.