/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் டைரி: லாரி மோதி மாணவர் பலி
/
போலீஸ் டைரி: லாரி மோதி மாணவர் பலி
ADDED : நவ 17, 2025 01:25 AM
லாரி மோதி மாணவர் பலி இடுவாயை சேர்ந்தவர் மதன், 16, நண்பர்கள் மோனிக், 16, சுஜய், 16. மூவரும் பிளஸ் 2 படிக்கின்றனர். நேற்று மதியம், மூன்று பேரும் டூவீலரில், 63 வேலம்பாளையத்தில் உள்ள சினிமா மாலுக்கு புறப்பட்டனர். ரோட்டில் இருந்த பேரிகார்டில் மோதாமல் இருக்க வலது புறம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆயில் டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த மதன் லாரியின் பின் டயரில் விழுந்து தலை நசுங்கி இறந்தார். மற்ற, இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருமணமான 2 வாரத்தில் வாலிபர் தற்கொலை திண்டுக்கல் மாவட்டம், பழநி, பாளையத்தை சேர்ந்தவர் கவுதம், 28; மேன் பவர் நிறுவனத்தில் தொழிலாளி. இவருக்கு, கணவரை இழந்த, ஏழு வயது குழந்தையுடன், மூலனுாரில் வசித்து வந்த பானுபிரியா, 29 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் திருமணம் செய்தனர். கணவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் குடும்ப பிரச்னை ஏற்பட்டது.
கடந்த 12ம் தேதி மனைவியுடன் தகராறு செய்து, தாலியை கேட்டு வாங்கி கொண்டு, திருநீலகண்டபுரத்தில் உள்ள அறைக்கு கவுதம் சென்றார். கத்தியால் கழுத்தை அறுத்து கொள்வதாக மிரட்டினார். இதையறிந்து மனைவி அறிவுரை கூறினார். இதையடுத்து, மனைவியை பார்க்க வீட்டுக்கு சென்ற கவுதம், பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். காயமடைந்த கவுதமை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிராக்டர் மோதி ஒருவர் பலி தாராபுரம், காளிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால், 35. டூவீலரில் தசராபட்டி அருகே சென்றபோது, டிராக்டர், டூவீலர் மீது மோதியது. படுகாயமடைந்த வாலிபரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்ற நிலையில், நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

