sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : மார் 29, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாத்திரை பறிமுதல்


குளத்துப்பாளையத்தில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக, டூவீலரில் வந்த, இருவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், காதர்பேட்டையை சேர்ந்த முகமது பைசல், 25, கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த அஜய், 24 என்பது தெரிந்தது. சோதனையில், இருவரிடம் இருந்து, 20 வலி நிவாரண மாத்திரைகளை கைப்பற்றிய சென்ட்ரல் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

வாலிபர் தற்கொலை


ஊத்துக்குளி, எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 30. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல், இருந்தார். இதனால், மனைவி, குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்றார். மனமுடைந்த தினேஷ்குமார் துாக்குமாட்டி இறந்தார்.

குட்கா கடத்தியவர் கைது


பூமலுார், வலையபாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். டூவீலரில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேஷ்குமார், 35 என்பது தெரிந்தது. விற்பனை செய்வதற்காக, 11 கிலோ குட்காவை கடத்தி செல்வது தெரிந்தது. அவரை கைது செய்த மங்கலம் போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பறிமுதல்


திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சந்தேகப்படும் விதமாக வெளியேறிய வாலிபரிடம் விசாரித்தனர். சோதனையில், 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. ஒடிசாவை சேர்ந்த இஸ்மாயில் முகமது, 18 என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். யில்வே ஸ்டேஷன் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்த போது, 2.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us