நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வடக்கு போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அங்கு நின்றிருந்த பீஹாரை சேர்ந்த ராஜன்குமார், 22 ஒரு கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி மோதி முதியவர் பலி
தாராபுரம், குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 71. காங்கயத்தில் சொந்த வீடு உள்ளது. நேற்று காலை தாராபுரத்தில் இருந்து காங்கயத்திலுள்ள வீட்டுக்கு டூவீலரில் காங்கயம் நோக்கி சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பி.ஏ.பி., கால்வாயில் பெண் சடலம்
காங்கயம் பழையகோட்டை ரோடு சத்திரவலசு பகுதியில் நேற்று பி.ஏ.பி., கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்து வந்தது. இறந்த பெண் யார், எந்த ஊர் என்பது குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.