வாலிபர் பலி
திருப்பூர்; காங்கயம், திட்டுப்பாறையை சேர்ந்தவர் நந்தகுமார், 25; தொழிலாளி. கடந்த, 18ம் தேதி இரவு காங்கயம் - சென்னிமலை ரோட்டில் வடக்குபாளையம் பிரிவு அருகே டூவீலரில் நண்பர் அபிமன்யு என்பவருடன் சென்றபோது ரோட்டின் குறுக்கே நடந்து சென்ற மனநலம் பாதித்த நபர் மீது மோதி, இருவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி நந்தகுமார் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
எண்ணெய் தொட்டியில் விழுந்து மாப்பிள்ளை பலி
திருப்பூர்; வெள்ளகோவில், கே.பி.சி., நகரை சேர்ந்தவர் திருமூர்த்தி, 31; கடந்த, நான்கு ஆண்டுகளாக சேரன் நகரில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். எண்ணெய் மில்லில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தவறி உள்ளே விழுந்தார். இதில் அவர் பலியானார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் டிச., மாதம் நடைபெற இருந்தது.
வாலிபர் பலி:
காங்கயம், திட்டுப்பாறையை சேர்ந்தவர் நந்தகுமார், 25; தொழிலாளி. கடந்த, 18ம் தேதி இரவு காங்கயம் - சென்னிமலை ரோட்டில் வடக்குபாளையம் பிரிவு அருகேடூவீலரில் நண்பர் அபிமன்யு என்பவருடன் சென்ற போது ரோட்டின் குறுக்கே நடந்து சென்ற மனநலம் பாதித்த நபர் மீது மோதி, இருவரும் காயமடைந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி நந்தகுமார் இறந்தார். எண்ணெய் தொட்டியில் விழுந்து மாப்பிள்ளை பலி: வெள்ளகோவில், கே.பி.சி., நகரை சேர்ந்தவர் திருமூர்த்தி, 31; கடந்த, நான்கு ஆண்டுகளாக சேரன் நகரில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருந்த போது, எண்ணெய் தொட்டியில் தவறி விழுந்து பலியானார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் டிச., மாதம் திருமணம் நடைபெற இருந்தது.