பேக்கரியில் தகராறு; ஐந்து பேர் கைது
கடலுார் மாவட்டம், சிறுபாக்கத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி, 27. திருப்பூர் மங்கலம் ரோட்டில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திருமூர்த்தி பணியாற்றும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். பேக்கரிக்கு வந்த சிலர், பணம் கொடுக்காமல், டீ, சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். பொருட்களை சேதப்படுத்தினர். இதை தட்டி கேட்ட திருமூர்த்தியை தாக்கினர். புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் ஞானப்பாண்டி, 53, சக்கரவர்த்தி, 21, அஜீத், 24 மற்றும் ஜெயபிரதாப், 22 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
கோவை, வால்பாறையை சேர்ந்தவர், 21 வயது இளம்பெண். இவர் கடந்த, இரு ஆண்டு முன், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்தார். அதே கல்லுாரியில் திருப்பூரை சேர்ந்த லித்தின்குமார், 22 என்பவர் காதலிப்பதாக பழகி வந்தார். இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அத்துமீறினார். புகாரின் பேரில், கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர்.