குட்கா வைத்திருந்தவர் கைது: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் போலீசார் சோதனை செய்த போது, சந்தேகப்படும் வகையில் இருந்த பாலசுதர்சன், 42, என்பவரை சோதனையிட்டனர். அவரிடம் 4.5 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. போலீசார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.
l திருப்பூர் தெற்கு போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனை செய்த போது, நிமாஸ் ரைட், 18 என்பவர் 480 கிராம் எடையுள்ள குட்கா பாக்கெட்டுகளுடன் பிடிபட்டார். அதைப் பறிமுதல் செய்த போலீசார் அந்நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மது பாட்டில் பதுக்கியவர் கைது நல்லுார் போலீஸ் எல்லைக்குட்பட்டகே.செட்டிபாளையம் பகுதியில், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனையிட்ட போலீசார், கந்தசாமி, 50, என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து, 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்தபோலீசார் அவரை கைது செய்தனர்.
ஒயர் திருட்டு: இருவர் கைது: திருமுருகன்பூண்டி அருகேயுள்ள முருகம்பாளையத்தில், போர்வெல் கிணற்றிலிருந்து மோட்டார் ஒயர் திருடப்பட்டது. விசாரணையில், ஒயர் திருடியது, கார்த்தி, 37 மற்றும்கேசவபிரசாத், 21 என்பது தெரிந்து, இருவரையும் திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ எடையிலான ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

