sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 போலீஸ் டைரி

/

 போலீஸ் டைரி

 போலீஸ் டைரி

 போலீஸ் டைரி


ADDED : ஜன 23, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா கடத்திய பெண்கள் கைது திருப்பூர் மாநகரில் கஞ்சா பதுக்கல், கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிரமாக கண்காணித்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், நேற்று முன்தினம் இரவு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகளிடம் விசாரித்தனர்.

அதில், வடமாநிலத்தை சேர்ந்த, இரு பெண்களின் உடைமைகளை சோதனை செய்ததில், அதிலிருந்த, 7.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஒடிசாவை சேர்ந்த சான்டி பீரோ, 58 மற்றும் ஹிரன் பனியா, 40 ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி தற்கொலை காங்கயம், சென்னிமலை ரோட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன், 35. கட்டட தொழிலாளி. திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியவர், மதுபோதையில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டார். நேற்று அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில், குமரன் சிலை அருகே நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், ஒடிசாவை சேர்ந்த ரிகேஷ் ஓரான், 23 என்பதும், விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம், 7 கிலோ, 100 கிராம் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us