UPDATED : ஆக 31, 2026 09:47 PM
ADDED : ஆக 31, 2026 08:21 PM
வெள்ளகோவில், சிலம்பகவுண்டன்வலசை சேர்ந்தவர் திருமூர்த்தி, 40; பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 3 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
ஊதியூர், செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 34. நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக ஊதியூருக்கு சென்றார். நாகரசநல்லூர் பிரிவு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
