/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விலை உயர்ந்த பைக் திருட்டு: போலீசார் விசாரணை
/
விலை உயர்ந்த பைக் திருட்டு: போலீசார் விசாரணை
ADDED : நவ 03, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசியை சேர்ந்தவர் தனசேகர், 21. பேக்கரி ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, சீனிவாசபுரம் பகுதியில் இவர் தங்கியிருந்த அறை முன், தனது 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ளடூவீலரை நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, காணவில்லை. இது குறித்து, அவிநாசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் 'சிசிடிவி' காட்சிகளை கண்காணித்த போது இருவர், டூவீலர் சைடு லாக் உடைத்து திருடி சென்றது தெரிந்தது. டூவீலர் திருடிய வர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

