/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் பணி தேர்வு; 2,093 பேர் எழுதினர்
/
போலீஸ் பணி தேர்வு; 2,093 பேர் எழுதினர்
ADDED : நவ 09, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழக போலீஸ் துறையில், 3,665 இரண்டாம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
தமிழகம் முழுதும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் பிஷப் உபகாரசாமி பள்ளியில் ஆண்களுக்கும், கொங்கு மெட்ரிக் பள்ளியில், பெண்களுக்கும் என, இரண்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
தேர்வு எழுத மொத்தம், 2,472 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வை, 2,093 பேர் எழுதினர். பலத்த போலீஸ் சோதனைக்கு பின் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், இரண்டு துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.

