/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
101வது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி
/
101வது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி
ADDED : நவ 09, 2025 11:52 PM

திருப்பூர்: திருப்பூரில், மூதாட்டி தனது 101வது பிறந்த நாளை, குடும்பத்தினர், உறவினர்கள் புடைசூழ கொண்டாடினார்.
திருப்பூர், ஜீவா காலனியை சேர்ந்தவர் ராமாத்தாள். 101வது வயதில் அடியெடுத்து வைக்கும் ராமாத்தாளுக்கு குடும்பத்தினர் சார்பில், பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதற்காக ராமாத்தாளின் மகன், மகள் வழி பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், உறவினர்கள் என, ஏழு தலைமுறைகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்பங்கேற்றனர்.
ராமாத்தாள்,பிரமாண்ட கேக் வெட்டி பகிர்ந்தார். அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆடல், பாடல் என உறவினர்கள் மகிழ்ந்தனர்.
மூதாட்டி கூறுகையில், ''ஏழு தலைமுறைகளை கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பது போல, எப்போதும் ஒற்றுமையுடனும், உடல் நலத்தோடும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும்'' என்றார்.

