/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது: ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்
/
சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது: ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்
சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது: ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்
சி.ஆர். கார்மென்ட்ஸ் கோப்பை வென்றது: ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 2ம் இடம்
ADDED : நவ 09, 2025 11:52 PM

திருப்பூர்:நிப்ட் - டீ பிரீமியர் லீக், அப்துல்கலாம் நினைவு கோப்பையை சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி கைப்பற்றியது. ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி இரண்டாமிடமும், குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் அணி மூன்றாமிடம் பெற்றது.அக்., மாதம் துவங்கி, இரண்டு மாதங்களாக, நிப்ட்- டீ கல்லுாரியில், அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான 'நிப்ட் டீ பிரிமீயர் லீக் - 7' கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய இப்போட்டியின், அரையிறுதி, நவ., முதல் வாரத்தில் நடந்தது.அரையிறுதி போட்டி முடிவில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி - சி.ஆர். கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று இறுதி போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஈஸ்ட்மேன் அணி, பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி, 20 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 167 ரன் குவித்தது. வினீத், 55 ரன் எடுத்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பழநிமுருகன், 13 பந்துகளில், 35 ரன் எடுத்து, ரன் குவிப்புக்கு உதவினார்.
ஆட்டநாயகன்
பழநிமுருகன்
இலக்கை விரட்டிய ஈஸ்ட்மேன் அணி, 18 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 109 ரன் எடுத்தது. 58 ரன் வித்தியாசத்தில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பேட்டிங்கில் அசத்திய பழநிமுருகன், நான்கு ஓவர் வீசி, 18 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் ஆல்பர்ட், நான்கு ஓவரில், 21 ரன் கொடுத்து, நான்கு விக்கெட் வீழ்த்தினார்; ஆட்டநாயகன் விருது பேட்டிங், பவுலிங்கில் அசத்திய பழநிமுருகனுக்கு வழங்கப்பட்டது.மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. நிப்ட் டீ கல்லுாரி சேர்மன் கோவிந்தராஜ், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன், கல்லுாரி நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், சி.ஆர்., கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன், டெக்னோ ஸ்போர்ட்ஸ் கிளப் உற்பத்தி பிரிவு தலைவர் லோகேஷ் ஆகியோர், வெற்றி பெற்ற அணிக்கு, 'நிப்ட் டீ பிரீமியர் லீக் - 7', அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பையை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.
குவாலியன்ஸ்
3ம் இடம்
மூன்றாம் இடம் பெறும் அணியை தேர்வு செய்வதற்கான போட்டி, குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் - விக்டஸ் டையிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வென்ற விக்டஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து, 14.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 79 ரன் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய, குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் அணி, 15.2 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 83 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் ஸ்ரீ ராம்அண்ணா தேர்வு செய்யப்பட்டார்.
----
3 அல்லது 4 காலம்
நிப்ட் - டீ பிரீமியர் லீக், அப்துல்கலாம் நினைவு கோப்பையை சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி கைப்பற்றியது. கோப்பையுடன் சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி வீரர்கள்.

