/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில யோகாசன போட்டி; 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
/
மாநில யோகாசன போட்டி; 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ADDED : நவ 09, 2025 11:53 PM

திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு, விருக் ஷா இன்டர்நேஷனல் பள்ளியில், இந்தியன் யோகா பெடரேஷன், மாநில யோகா ஸ்போர்ட்ஸ் டேவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில், 91வது மாநில யோகாசன போட்டி நேற்று நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டேவலப்மெண்ட் அசோசியேஷன் செயலாளர் மாரியப்பன் போட்டிகளை துவக்கி வைத்தார். யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் திருப்பூர் தலைவர் ராஜா, செயலாளர் சுரேஷ்பாண்டி, பொருளாளர் பூர்ணிமாஜோதி, ஒருங்கிணைப்பாளர் மாலதி போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தினர்.
யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் திருப்பூருடன் சதுர்யோகா, தத்வமசி யோகா அகாடமி, மெகானியா யோகா ஆகிய அமைப்புகள் யோகா போட்டியை இணைந்து நடத்தின. மாணவியர் பிரிவில், திருப்பூரை சேர்ந்த பூர்ணா, ஹரிணி, மாணவர் பிரிவில், திருப்பூரை சேர்ந்த முகிழன், சச்சின் முறையே முதலிரண்டு இடங்களை பெற்று, பாராட்டு பெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள், ஆந்திராவில் டிச. மாத நடக்கவுள்ள, தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

