/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றில் மூழ்கி போலீஸ் ஏட்டு பலி
/
ஆற்றில் மூழ்கி போலீஸ் ஏட்டு பலி
ADDED : ஏப் 22, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி போலீஸ் ஏட்டு இறந்தார்.
கோவை மாவட்டம், இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்,44. கோவை ஆயுதப்படை போலீஸ் ஏட்டு. நண்பரான, ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜாவின், சொந்த ஊரான தாராபுரம், காளிபாளையத்துக்கு நேற்று விடுமுறையில் சென்றார்.
அங்கு, அமராவதி ஆற்றில் நேற்று மதியம் இருவரும் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக சரவணன் ஆற்றில் மூழ்கினார்.
நீரில் மூழ்கிய சரவணனை, ராஜா, அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்டு வெளியே கொண்டு வந்தார். ஆனால், சரவணன் இறந்து விட்டார்.
தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.