/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் திருட்டு கண்டறிய களமிறங்கிய விவசாயிகள் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
/
தண்ணீர் திருட்டு கண்டறிய களமிறங்கிய விவசாயிகள் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
தண்ணீர் திருட்டு கண்டறிய களமிறங்கிய விவசாயிகள் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
தண்ணீர் திருட்டு கண்டறிய களமிறங்கிய விவசாயிகள் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 01, 2025 07:11 AM

திருப்பூர்: பி.ஏ.பி., பிரதான கால்வாயில் நீர் திருட்டை கண்டறிய விவசாயிகளே களமிறங்கிய நிலையில், போலீசார் அவர்களை தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், கடைமடை பகுதிகளாக, காங்கயம், வெள்ளகோவில் பகுதிகள் உள்ளன. 'பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் நீர் திருடப்படுவதால், கடைமடைக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை' விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தியும், நீதிமன்ற வழிகாட்டுதல் பெற்றும் கூட, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விவசாயிகளே களத்தில் இறங்கி, அணைகளில் இருந்து, எவ்வளவு நீர் எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிளைக் கால்வாய்க்கும் எவ்வளவு வினியோகிக்கப்படுகிறது. எங்கே நீர் திருட்டு நடக்கிறது; எந்த வாய்க்காலில் அதிகளவு நீர் எடுக்கப்படுகிறது என்பதை கள ஆய்வு செய்ய முடிவெடுத்தனர்; இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவலும் தெரிவித்தனர்.
நேற்று, காலை, திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேட்டுபுதுாரில் இருந்து பொங்கலுார் பகுதியில் உள்ள கால்வாய் பகுதிகளை, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர் பார்வையிட சென்ற போது, காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களை தடுத்து, பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், துறை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என, கூறினார். டி.எஸ்.பி., தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சமாதான பேச்சில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டனர். இதையடுதது, வாய்க்கால் மேடு அருகில் காத்திருப்பில் அமர்ந்தனர். பின், தாசில்தார், டி.எஸ்.பி., பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இரு கட்டமாக பேச்சு நடந்தும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. விவசாயிகள், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.