ADDED : டிச 14, 2024 11:25 PM
திருப்பூர்: பொங்கலுார், சேமலைகவுண்டன்பாளையத்தில் விவசாயி தெய்வசிகாமணி, 78, இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொலை நடந்து, 16 நாட்களை கடந்தும், இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
இதுவரை சரியான துப்பு கிடைக்காமல் வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, இறந்தவர்களுடன் பிரச்னை செய்த நபரிடம் விசாரணை நடந்தது. தோட்டத்தில் தேங்காய் பறிக்க வரும் தொழிலாளி, வாகனத்தில் ஏற்றி செல்பவர் என, 50க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, டி.ஐ.ஜி., - எஸ்.பி., முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.